பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவமனை காவலர் முதலுதவி சிகிச்சை அளித்த காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனாவிடம் கேட்டபோது, இரவு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஆண் செவிலியர், விஷம் குடித்தாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துவந்த நிலையில், அப்போது காலில் ரத்தம் வழிந்த நிலையில் வந்த இளைஞரைக் கண்ட மருத்துவமனை காவலர், அதை துடைத்து சுத்தம் செய்ததாகவும், சிகிச்சை ஏதுவும் அளிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.