லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தளர்வு அறிவித்து உத்தரவிட்டது.
வாரந்தோறும் 150 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கையெழுத்திடுவது சிரமமாக உள்ளதாகவும், உடல் மற்றும் மனரீதியாக அழுத்தம் ஏற்படுவதாகவும், வயதான பெற்றோரை கவனிக்க முடியவில்லை என்றும் கூறி நிபந்தனையில் விலக்கு அளிக்க அங்கித் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.