​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணி.. வெற்றிகரமாக முடித்த டாடா நிறுவன இயந்திரம்..!

Published : Aug 30, 2024 4:13 PM

மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணி.. வெற்றிகரமாக முடித்த டாடா நிறுவன இயந்திரம்..!

Aug 30, 2024 4:13 PM

சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த டாடா நிறுவனத்தின் இயந்திரம், பணியை முடித்து, ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது.

கொல்லி என பெயரிடப்பட்ட அந்த இயந்திரம்,  கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அன்று அயனாவரம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடங்கி 903 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயனாவரம் - ஒட்டேரிக்கு இடையிலான சுரங்கப்பாதைப் பிரிவு, அதிக மக்கள் தொகை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும் கொண்ட மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவு என்று கூறப்படும் நிலையில், மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் கொல்லி இயந்திரம் பணியை நிறைவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.