சென்னை கே.கே.நகரில் தனது ஸ்கூட்டரை இடித்துவிட்டுச் சென்றதை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவியைத் தாக்கியதாக வழக்கறிஞர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஎஸ்ஐ மருத்துவமனையில் 3ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் குணசந்தியா என்ற மாணவி, நேற்று விடுதியை ஒட்டிய சாலையில் இருந்து அண்ணா மெயின் ரோட்டில் ராங் சைடில் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர் திசையிலிருந்து பைக்கில் வந்த வழக்கறிஞர் துரைசிங்கம் என்பவர் குணசந்தியாவின் ஸ்கூட்டர் மீது இடித்ததாகக் கூறப்படும் நிலையில், "பார்த்து செல்லுங்கள்" என குணசந்தியா கூறியுள்ளார்.
ராங் சைடில் வந்துவிட்டு, தன்னை குறை சொல்வதாக ஆத்திரமடைந்த வழக்கறிஞர் துரைசிங்கம், குணசந்தியாவை ஆபாசமாகத் திட்டி, அவரது வாகனத்தின் சாவியைப் பிடுங்கிக் கொண்டதாகவும் சாவியை திருப்பிக் கேட்டபோது குணசந்தியாவின் கையைப் பிடித்து துரைசிங்கம் முறுக்கியதாகவும் கூறப்படுகிறது.