​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் - அட்டவணை வெளியீடு

Published : Aug 30, 2024 1:54 PM

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் - அட்டவணை வெளியீடு

Aug 30, 2024 1:54 PM

சென்னை தீவுத்திடலை சுற்றி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியஷிப், ஜே.கே.டயர் FL GB ஃபார்முலா 4, இந்தியன் ரேசிங் லீக் என அனைத்து பங்கேற்பாளர்களுக்குமான பயிற்சி பந்தயங்கள் நடைபெற உள்ளது. இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தில் ஒரு காருக்கு இரண்டு ஓட்டுநர்கள் ஏ மற்றும் பி என இருபிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பந்தயத்தில் ஒரு ஏ பிரிவு ஓட்டுநரும். இரண்டாவது பந்தயத்தில் பி பிரிவு ஓட்டுநரும் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த பந்தயத்திற்காக தீவுத்தடலை சுற்றி உள்ள அண்ணா சாலை, பல்லவன் சாலை, கொடிமரச் சாலை, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.