​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ தடுப்பு மருந்து வழங்க தற்காலிக போர் நிறுத்தம்

Published : Aug 30, 2024 8:54 AM

காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ தடுப்பு மருந்து வழங்க தற்காலிக போர் நிறுத்தம்

Aug 30, 2024 8:54 AM

காசாவில் சிறார்களுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் நோக்கில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டன. 25 ஆண்டுகளில் முதல் முறையாக காசா பகுதியில் 10 மாத குழந்தைக்கு போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவசர நடவடிக்கையாக வரும் சனிக்கிழமை முதல் சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் சிறார்களுக்கு போலியோ தடுப்பு மருந்துகள் வழங்கும் வகையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, தெற்கு மற்றும் வடக்கு காசாவில் தலா 3 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அந்நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.