​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புகார் அளித்த தம்பதியிடம் 100 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது

Published : Aug 29, 2024 8:55 PM

புகார் அளித்த தம்பதியிடம் 100 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது

Aug 29, 2024 8:55 PM

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் கணவனுக்கு திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் தங்க நகையை  அவரின் மனைவியிடம் ஒப்படைக்காமல் அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான ராஜேஷ்குமாரும், அபிநயாவும் கடந்தாண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவிடம், ராஜேஷ் குடும்பத்துக்கு வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் தங்க நகையை மீட்டுத்தருமாறு அபிநயாவின் குடும்பத்தினர் முறையிட்டனர்.

இதையடுத்து 100 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ராஜேஷ் ஒப்படைத்த நிலையில், அந்த நகையை அபிநயா வீட்டாரிடம் தராமல், 43 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்ததாக திருமங்கலம் டி.எஸ்.பி.யிடம் ராஜேஷ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆய்வாளர் கீதாவை மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யாபாரதி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், இதுவரை 62 பவுன்நகைகளை மட்டுமே அவர் திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.