முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை, தனக்குக் கிடைத்த வாய்ப்பாக தாமஸ் க்ரூக்ஸ் பயன்படுத்திக்கொண்டதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
பென்சில்வேனியாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூடத்தில், டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய க்ரூக்ஸ், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ அதிகாரிகள், ஜோ பைடன் மற்றும் டிரம்ப் பிரசாரக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த க்ரூக்ஸ் திட்டமிட்டிருந்ததாகவும், அதன் முன்னோட்டமாக டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
பைடன் மற்றும் டிரம்ப் குறித்து ஒரு மாதத்தில் 60 முறைக்கு மேலும், வெடிபொருள்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை இண்டர்நெட்டில் க்ரூக்ஸ் திரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.