வரி எய்ப்பு செய்வோர் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அவர், தொழில் செய்வதற்கான சான்று பெற்று தொழில் செய்யாதவர்கள் மற்றும் தொழில் வரி ஏய்ப்பு செய்வோரின் விபரங்களை சேகரிப்பதாகக் கூறினார்.
வணிகவரித்துறையில் கடந்த ஆண்டை விட இதுவரை 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், தொழில் நிறுவனத்தினர் பொதுமக்களிடம் தாங்கள் வசூலிக்கும் ஜி.எஸ்.டி. வரியை நேர்மையாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்றார்.