​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

Published : Aug 29, 2024 1:09 PM

பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

Aug 29, 2024 1:09 PM

பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் எனக்கூறி, அவருக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல், அப்போது டிஎஸ்பியாக பணியாற்றிய தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரித்தால் தான், கடத்தல் நபர் சுபாஷ் கபூருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும் எனவும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன் மாணிக்கவேல் தரப்பினர், டிஐஜி ரேங்க் அலுவலர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், ஆனால் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல எனவும் வாதிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.