காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை முன் உள்ள மீனாட்சி உணவகத்தில் சாம்பாரில் பல்லி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, உணவகத்தை தற்காலிகமாக இழுத்துப் பூட்டினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்காக வாங்கிச் சென்ற இட்லியுடனான சாம்பாரில் பல்லி இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், காலாவதியான கோழிக்கறி, அழுகிப்போன காய்கறிகள், பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, உணவகத்தை சீர் செய்ய 5 நாட்கள் கெடுவும் 5000 ரூபாய் அபதாரமும் விதித்தனர்.
Advertisement