ஓசூர் முதல் கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், பெங்களூரு மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஷ்வர் ராவை சந்தித்து புதிய மெட்ரோ பாதை குறித்து ஆலோசனை நடத்தினார். அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைய உள்ள மெட்ரோ வழித்தடம், தமிழ்நாட்டில் 11 கிலோ மீட்டர் மற்றும் கர்நாடகாவில் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அந்த வழித்தடம் அமையும் என்றும் கூறியுள்ளனர்.