மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கும் தமிழக அரசு, அக்கல்லூரிகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பணியிடங்களை, நிரந்தர முதல்வர்களை கொண்டு நிரப்பக் கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குநர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை, செப்டம்பர் 3ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.