​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் குப்பைகள் அள்ளுவதில்லை என்று தொடர் புகாரில் ஒப்பந்ததாரர்களை கண்டித்த மாநகராட்சி மேயர்

Published : Aug 27, 2024 10:49 AM

கடலூரில் குப்பைகள் அள்ளுவதில்லை என்று தொடர் புகாரில் ஒப்பந்ததாரர்களை கண்டித்த மாநகராட்சி மேயர்

Aug 27, 2024 10:49 AM

கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலானவை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், வயதானவர்களை வைத்து வேலை வாங்குவதாகவும் ஒப்பந்ததாரர்களை மேயர் சுந்தரி ராஜா கண்டித்தாக கூறப்படுகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்ற புகாரை அடுத்து ஆய்வுக்காக மாஞ்சை நகர் மைதானத்திற்கு குப்பை அள்ளும் வாகனங்களுடன் வரவேண்டும் என ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

50 சதவீத வாகனங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்ட நிலையில், மேயரும், மாநகராட்சி ஆணையர் அனுவும் மேற்கொண்ட ஆய்வில், அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒப்பந்ததாரர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் மேயர் சுந்தரி ராஜா அறிவுரைகளை வழங்கினார்.