கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கிச்சிப்பாளையம் குலாளர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் நாட்டியமும் அரங்கேறியது.
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணர், ராதை வேடம் மட்டுமின்றி, சிவபெருமான், அம்மன் என பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகளின் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. இதில் இஸ்லாமியக் குழந்தைகளும் கிருஷ்ணர் வேடமிட்டு பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கஸ்தூரிபாய் கம்பெனி ஜவுளிக்கடை சார்பாக கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பாக கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.