சென்னை தண்டையார்பேட்டை ஜி.ஏ சாலையில் மருத்துவர் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பல் மருத்துவமனையில் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
ஊழியர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அறையை ஆக்கிரமித்திருந்த புகையையும் பிரத்யேகக் கருவி கொண்டு வெளியேற்றினர்.