​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதியை பெற்றுத்தருவதில் மம்தா அரசு தோல்வி - மத்திய அமைச்சர்..!

Published : Aug 26, 2024 9:34 PM

நீதியை பெற்றுத்தருவதில் மம்தா அரசு தோல்வி - மத்திய அமைச்சர்..!

Aug 26, 2024 9:34 PM

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி அளித்தும், அதில் பெரும்பாலானவற்றை மேற்குவங்க அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அக்கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், கடந்த 2024 ஜூலை வரைக்கும் வெறும் 6 போக்ஸோ நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பாட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.