அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸின் கையாளாகாத தனம், மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
காஸா போரில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா போராளிகளும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துவருவதால் மத்திய கிழக்கில் பெரியளவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஜோ பைடன் கடற்கரையில் ஓய்வெடுப்பதாகவும், கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.