கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அடியாக குறைந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.