திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கிரிவலப் பாதையில் 64 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பக்தர்கள் நடைபாதையில் நடக்காமல், சாலையில் நடந்து செல்வதால் உள்ளூர் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
வெளியூரில் இருந்து வருபவர்கள், தங்களது வாகனங்களை குடியிருப்புப் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதாகவும் உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர்.