தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் கலாச்சாரம் பரவி வருவதால்தான், பொதுமக்கள் லஞ்ச லாவண்யத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்கு 500,1,000, 2,000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பின், முதலீடு செய்த பணத்தை அறுவடை செய்யும் வேலையைப் பார்க்கின்றனர் என்றார்.