திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட 12-வது வார்டில் உள்ள வீடுகளில் அடிக்கடி நபர் ஒருவர் வீடுகளில் புகுந்து திருடுவது பாத்ரூமில் குளிக்கும்போது எட்டிப் பார்ப்பது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவள்ளூர் நகர போலீசில் மூன்று முறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் வீட்டில் பாத்ரூமில் ஒருவன் எட்டிப் பார்க்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.