அமெரிக்க அதிபர் தேர்தலில் கென்னடி குடும்ப வாரிசு எடுத்த திடீர் முடிவு
Published : Aug 24, 2024 9:16 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டுள்ள முன்னாள் அதிபர் கென்னடி குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் எஃப் கென்னடி தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு டிரம்பிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
ஜோ பைடன் கட்சியைச் சேர்ந்தவரும் பிரபல அரசியல்வாதியுமான ராபர்ட் எஃப் கென்னடி கடும் பிரசாரம் செய்து வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டதோடு, தனது பெயரை வாக்குச்சீட்டில் இருந்து எடுத்து விடுமாறு தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி உள்ளார்.