விபத்தில் உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடுத் தொகை வழங்காமல், 14 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில், விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு, திண்டிவனம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில், அதே பேருந்தில் பயணித்த செல்வராஜ் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதையடுத்து செல்வராஜின் மனைவி லதா மற்றும் பிள்ளைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த செய்யாறு சார்பு நீதிமன்றம், செல்வராஜின்குடும்பத்தினருக்கு சுமார் இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனிடையே,14 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்காததால், செல்வராஜின் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி செய்யாறு பேருந்து நிலையத்தில் நின்ற விழுப்புரம் கோட்ட அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.