சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரத்தம் உறையாமைக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்து வலது கால் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின்தந்தை அளித்த புகாரின்பேரில் ஸ்டான்லி மருத்துவர்கள் தலைமையிலான குழு மேற்கொண்ட விசாரணையில், 13 வயது சிறுவனுக்கு மவுண்ட் தனியார் மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 15 நாட்களுக்குள் அந்த மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் வெளியேற்றவும், இதற்குப் பிறகு வேறு எந்த நோயாளிகளையும் அனுமதிக்க கூடாது என்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.