திருப்பதி கோயிலில் கலர் ஜெராக்ஸ் தரிசன டிக்கெட்டுகளை பயன்படுத்தி முறைகேடு - 3 பேர் கைது
Published : Aug 21, 2024 1:51 PM
திருப்பதி கோயிலில் கலர் ஜெராக்ஸ் தரிசன டிக்கெட்டுகளை பயன்படுத்தி முறைகேடு - 3 பேர் கைது
Aug 21, 2024 1:51 PM
திருப்பதி கோயிலில் ஒரிஜினல் தரிசன டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து தினசரி சுமார் 1 லட்சம் ரூபாய் வரை விற்று வந்ததாக, டிக்கெட்டுகளை சரிபார்த்து கோயிலுக்குள் அனுமதிக்கும் பணியில் இருந்த ஊழியர்கள் உட்பட மூவரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட் நிறுவனம், ஆந்திர மாநில சுற்றுலா அபிவிருத்தி கழக ஊழியர்கள் இருவருடன் இணைந்து, 300 ரூபாய் டிக்கெட்டுகளை, முறைகேடாக விற்று, பக்தர்களை சாமி கும்பிட அனுமதித்து வந்ததாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.