​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகையில் மூத்த குடிமகனிடம் அலட்சியம் - மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நுகர்வோர் நீதிமன்றம் அபராதம்

Published : Aug 20, 2024 7:23 PM

நாகையில் மூத்த குடிமகனிடம் அலட்சியம் - மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் நுகர்வோர் நீதிமன்றம் அபராதம்

Aug 20, 2024 7:23 PM

மூத்த குடிமகனிடம் அலட்சியமாக நடந்துகொண்டதாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதமும், வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு பகுதியைச் சேர்ந்த பாபுஜி என்பவர், சிறப்பு இதய நோய் மருத்துவ நிபுணர் ஓமன் ஜார்ஜிடம் மருத்துவ ஆலோசனை பெற பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார்.

மருத்துவமனைக்கு வந்த அவரை சில பரிசோதனைகளை எடுக்கும்படி பயிற்சி மருத்துவர் கூறியுள்ளார். பரிசோதனைகளை எடுத்த பிறகும், 300 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்த தன்னை சிறப்பு மருத்துவரை சந்திக்க விடாமல், மருத்துவ அறிக்கை தராமலும் அலட்சியமாக நடத்தியதாக மருத்துவமனை மீது பாபுஜி வழக்கு தொடுத்திருந்தார்