பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி. சங்கரின் மகன் திருமண விழாவில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி இடம்பெற்றது குறித்த எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்-இன் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.
கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதால், பா.ஜ.க.வுடன் தி.மு.க ரகசிய உறவு வைத்துள்ளதாக இ.பி.எஸ் கூறியிருந்தது பற்றியும் விளக்கம் அளித்தார்.