​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பறவைகள் எச்சம்... பறவைகளை கொல்ல விஷம் கலந்த நெல்மணிகளை தூவிய மர்ம நபர்கள்

Published : Aug 19, 2024 3:47 PM

திருவாரூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பறவைகள் எச்சம்... பறவைகளை கொல்ல விஷம் கலந்த நெல்மணிகளை தூவிய மர்ம நபர்கள்

Aug 19, 2024 3:47 PM

திருவாரூர் மாவட்டம் உப்பூரில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது பறவைகள் எச்சமிட்டு அது தண்ணீரில் கலப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், பறவைகளை கொல்வதற்காக விஷம் கலந்த நெல்மணிகளை அங்கு தூவியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

3 தினங்களுக்கு முன், அவ்வாறு தூவப்பட்டிருந்த விஷம் கலந்த நெல் மணிகளை சாப்பிட்டு 7 புறாக்கள் இறந்ததாக கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றும் அவ்வாறே விஷ நெல்மணிகள் தூவப்பட்டிருந்ததை கவனித்த கிராம மக்கள், குடிநீரிலும் விஷம் கலந்திருக்கலாம் எனக்கூறியதால், ஆய்வுக்கு மாதிரிகளை சேகரித்ததுடன், தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றினர்.