சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற ஜீரோ ஆக்சிடண்ட் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டிருந்த குறும்படத்தில் விதிகளை மதிக்காதோரை அரிவாள், கம்புகளுடன் அடிக்க முற்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு உயிர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்தவே அத்தகைய குறும்படம் தயாரிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் விளக்கமளித்தார்.