விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
அடுத்த மாதம் 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், காவல்துறையினருக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலைகளை நிறுவவும், நீர் நிலைகளில் அவற்றை கரைக்கவும், உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் நிலையான ஆணையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், டி.ஜி.பி. வலியுறுத்தியுள்ளார்.