வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வடசென்னையில் முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைய உள்ளது. இதற்காக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது..