ஜவ்வாது மலையில், தனியார் பங்களிப்பின்மூலம், மாம்பழத் தோட்டம் அமைக்கவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புதிய திட்டங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில், சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் சாகச சுற்றுலா கட்டிடம், தங்கும் விடுதி கட்டுமானம் மற்றும் கோளப்பன்ஏரி ஆகியவற்றின்மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட அவர், ஜவ்வாது மலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை, அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.