புவி கண்காணிப்பு பணிகளுக்காக இ.ஓ.எஸ். - 8 செயற்கைகோளுடன் இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட் இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
சுமார் 175 புள்ளி 5 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை 475 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் உள்ள GNSS-R கருவி கடலின் மேற்பரப்பு, காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு போன்ற பணிகளுக்கு பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், செயற்கைக்கோளில் உள்ள எஸ்.ஐ.சி. யூவி டோசிமீட்டர் கருவி விண்ணில் உள்ள புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணிக்கும் என்றும் விண்ணுக்கும் மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு கருவியான EOIR, பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கும், காட்டுத் தீ, எரிமலை போன்றவற்றை கண்டறியவும் பயன்படுத்தப்பட உள்ளது.