மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன் கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலையுடன் இணைந்து பிரத்யேகமான இமேஜிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமனை பகுப்பாய்வு செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும் என்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு ஊதா நிறத்திலும், அடர்த்தியான வழுவழுப்புடனும் காணப்படும் என்றும் கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பில் இருக்கும் என்றனர்.