மெட்ரோவில் பயணிப்பவர்களுக்காக ஏற்கனவே சிங்கார சென்னை அட்டை நடைமுறையில் உள்ள நிலையில் கூடுதலாக தனியார் நிறுவனத்தின் ஆன்கோ ரைடு கார்டு என்ற அட்டையை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களில் யூ.பி.ஐ. மூலம் 100 ரூபாய் செலுத்தி ஆன்கோ ரைடு அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அதில் 50 ரூபாய் ரீசார்ஜ் கட்டணமாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.