ஆக்கிரமிப்புகளை அகற்ற பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேரடி அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் அனுப்பிய நோட்டீசுகளை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறையினர் தான் சட்டபடி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் பி.டி.ஓ. உள்ளிட்டோர் அச்சுறுத்தும் வகையில் நோட்டீஸ் அனுப்ப கூடாது என்றும் உத்தரவிட்டனர்.