நெடுஞ்சாலை துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான 180 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி சிட்கோ வளாகத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள, கோயில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏலகிரி - ஜலகம்பாறை சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலா தடம், 29 மாவட்டங்களில் அரசு நிலங்களில் உருவாக்கப்பட்டுள்ள மரகதப் பூஞ்சோலைகள், காசிமேட்டில் பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு மையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் விடுதி, பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.