ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் நிலத்தை தனியார் சோப்பு நிறுவனத்திடம் இருந்து வருவாய் துறையினர் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு எனும் கிராமத்தில் தனியார் சோப்பு நிறுவனத்திற்கு சொந்தமாக 199 ஏக்கர் நிலத்தில்,154 ஏக்கர் நிலத்தை 2021-ம் ஆண்டு மாதவரத்தைச் சேர்ந்த மணீஷ் என்பவருக்கு விற்க முயன்றனர்.
அதில் 10 ஏக்கரை தனக்கு கேட்டு அஸ்வத்தாமன் மிரட்டிய நிலையில், ஆம்ஸ்ட்ராங் உள்ளே வந்ததால் அவருடன் மோதல் ஏற்பட்டது. அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பழகிய அஸ்வத்தாமன், சமயம் பார்த்து காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் பங்கெடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சோப்பு நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த 14.5 ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.