​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளோ இருந்தும், கார் பந்தயம் நடத்துவதில் அரசு முனைப்புடன் உள்ளது - இ.பி.எஸ்.

Published : Aug 11, 2024 5:15 PM



நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளோ இருந்தும், கார் பந்தயம் நடத்துவதில் அரசு முனைப்புடன் உள்ளது - இ.பி.எஸ்.

Aug 11, 2024 5:15 PM

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதைத் தடுக்குமாறு பல முறை தெரிவித்தும் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய அவர், நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளோ இருந்தும், கார் பந்தயம் நடத்துவதில் அரசு முனைப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

575 கோடி ரூபாய் செலவில் தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 ஏரிகளுக்கு நீரோட்டும் திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்தி இருந்தால் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக கலந்திருக்காது என்றும், 100 ஏரிகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டமும் விவசாயிகளின் வாழ்க்கையும் உயர்ந்திருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.