​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
108 யானைகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் இந்தியாவிடம் உள்ளது.. இந்திய ராக்கெட்டுகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய இஸ்ரோ..

Published : Aug 11, 2024 1:25 PM

108 யானைகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் இந்தியாவிடம் உள்ளது.. இந்திய ராக்கெட்டுகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கிய இஸ்ரோ..

Aug 11, 2024 1:25 PM

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்திய ராக்கெட்டுகளின் பரிமாண வளர்ச்சி குறித்த காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

இஸ்ரோ முதன் முதலில் ஏவிய பரிசோதனை ராக்கெட் எஸ்.எல்.வி. 3 முதல் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான எச்.எல்.வி.எம். வரையிலான ராக்கெட்டுகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாயை மட்டுமே சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட ராக்கெட்டுகள் தயாரித்த நிலை மாறி, 108 யானைகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் இந்தியாவிடம் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 தரையிறக்கப்பட்ட நாளை இந்தாண்டு முதல் தேசிய விண்வெளி தினமாக இந்தியா கொண்டாட உள்ளது.