அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி நிலை நீடிக்கும் 3 மாநிலங்களில் டிரம்பை விட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை அதிகமுள்ள மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் மாநிலங்கள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்துவருகின்றன.
கடந்த முறை ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றிருந்த அந்த 3 மாநிலங்களிலும் டிரம்பின் செல்வாக்கு அதிகரித்துவந்த நிலையில், அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது முதல் மீண்டும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.