​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சாவூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான சோழர்கால பெருமாள் சிலை கடத்திய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

Published : Aug 10, 2024 12:04 PM

தஞ்சாவூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான சோழர்கால பெருமாள் சிலை கடத்திய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

Aug 10, 2024 12:04 PM

தஞ்சாவூர் மாவட்டம் மேலதிருவிழாபட்டி பகுதியில் வாகன தணிக்கையின்போது காரில் மறைத்துவைத்து கடத்தமுயன்ற 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து உலோக பெருமாள் சிலையை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றை தூர்வாரும்போது இந்த சிலை கிடைத்ததாகவும் அதனை யாருக்கும் தெரியாமல் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.

தனது தந்தை இறந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் அந்த சிலையை வெளிநாட்டில் இரண்டு கோடிக்கு விற்க காரில் மறைத்துவைத்து எடுத்து சென்றபோது தினேஷ் போலீசாரிடம் சிக்கினர். சிலையை கைப்பற்றியுள்ள போலீசார் அது எந்த கோயிலுக்கு சொந்தமானது என விசாரித்து வருகின்றனர்.