தலையை நசுக்கி தப்பிய வாகனம்.. பாரம் தாங்காமல் சிதறிய தலைக்கவசம்.! உயிரோடு மறித்து போன மனிதநேயம்..! காட்டிக் கொடுத்தது ஆம்னி பேருந்து சிசிடிவி
Published : Aug 09, 2024 8:58 PM
தலையை நசுக்கி தப்பிய வாகனம்.. பாரம் தாங்காமல் சிதறிய தலைக்கவசம்.! உயிரோடு மறித்து போன மனிதநேயம்..! காட்டிக் கொடுத்தது ஆம்னி பேருந்து சிசிடிவி
Aug 09, 2024 8:58 PM
தூத்துக்குடி மேம்பாலத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகன ஓட்டிமீது வாகனத்தை மோதி உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற சரக்குவாகனத்தை இரு தினங்கள் கழித்து ஆம்னி பேருந்தின் சிசிடிவி காட்சியை வைத்து அடையாளம் கண்ட போலீசார் ஓட்டுனரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி சேர்ந்த சமுத்திரபாண்டி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த புதன்கிழமை மதியம் 1.40 மணியளவில் அலுவலகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது சாலையில் தவறி விழுந்த சமுத்திரபாண்டியின் தலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சமுத்திரபாண்டி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் ஒருவர், தனது பேருந்தின் வலது பக்கம் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான இந்த விபத்துக்காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனை வைத்து போலீசார் உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற சரக்கு வாகனத்தை அடையாளம் கண்டனர்
சம்பவத்தன்று சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மேம்பாலத்தில் தான் ஓட்டிச்சென்ற பைக் வழுக்கியதால் சமுத்திரபாண்டி சாலையில் தவறி விழுந்துள்ளார் . அடுத்த நொடியே ஆம்னி பேருந்தை ஓவர் டேக் செய்து எதிரே வந்த சரக்கு வாகனம் சாலையில் விழுந்து கிடந்த சமுத்திரபாண்டி மீது ஏறி இறங்கியது.
தனக்கு முன்பாக சென்ற ஆம்னி பேருந்தை முந்திசெல்வதற்காக சரக்குவாகன ஓட்டுனர் வேகமாக இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் சுட்டிக்காட்டினர்.
தலைக்கவசம் அணிந்திருந்த சமுத்திரபாண்டி தலை மீது முதலில் சரக்கு வாகனத்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் தலைவசம் உடைந்து நொறுங்கி தெறிந்து ஓடும் காட்சிகளும், அதனை தொடர்ந்து பின் சக்கரமும் ஏறியதால் அவர் தலை முழுவதுமாக நசுங்கிய காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி இருந்தது.
சரக்கு வாகன ஓட்டுனர் பொறுப்பற்ற முறையில், வேகமாக ஓட்டியதே உயிரிழப்புக்கு காரணம் என்பதை உறுதி செய்த போலீசார் தப்பிச்சென்ற சரக்கு வாகன ஓட்டுனரை கைது செய்தனர்.
பொதுவாக பாலத்தில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. குறுகலான மேம்பாலத்தில் அதிவேகத்தில் சென்று மோதிவிட்டு உயிருக்கு போராடியவரையும் காப்பாற்றாமல் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் தப்பிச்சென்றதால் ஓட்டுனர் இசக்கி முத்து மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.