​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
604 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் பயணம் ; மாற்றுத்திறனாளிகளின் உலக சாதனை முயற்சி

Published : Aug 09, 2024 1:00 PM

604 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் பயணம் ; மாற்றுத்திறனாளிகளின் உலக சாதனை முயற்சி

Aug 09, 2024 1:00 PM

மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 15 பேர் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில், முற்றிலும் பார்வை திறன் அற்ற 11 வயது மாணவர் லக்ஷய்குமார் என்பவர் பயிற்றுநரின் குரல் வரும் திசையில் பயணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.