வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் மத சுதந்திரத்தில் தலையிடுவது அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான் வக்ஃபு திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாகவும், யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் சரி மசோதா வரலாற்றில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது என்றும் யாருடைய உரிமையையும் இது பறிக்காது என்றும் கூறிய அமைச்சர், உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங் பேசிய போது, இம்மசோதா மசூதிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி அல்ல என்றும் வக்ஃப் வாரியங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதே மசோதாவின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.