தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், சர்வ சுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்து அவனது பையை ஆசிரியர் சோதனையிட்ட போது, கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்ததாகவும், அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் மாணவன் வாங்கியதாகவும் செய்தி வெளியானதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழக காவல் துறையை எதிர்கட்சியினரை பழிவாங்கும் ஏவல்துறையாக மட்டும் பயன்படுத்தாமல், இனியாவது போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் இ.பி.எஸ். கூறியுள்ளார்.