மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சம்பானோடை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் செந்நிறத்தில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்தக் கிராமத்துக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர் மகாபாரதி, தண்ணீர் தொட்டியை இடிக்க உத்தரவிட்டார். அத்துடன், தற்காலிகமாக மூன்று கைப்பம்புகளை அமைக்கவும், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.