அரசு மாநகர பேருந்தா..? மரண விலாஸ் பேருந்தா..? அதிவேக ஓட்டுநர் அடாவடி..! கோபித்துக் கொண்டு இறங்கி சென்றார்
Published : Aug 07, 2024 9:24 PM
அரசு மாநகர பேருந்தா..? மரண விலாஸ் பேருந்தா..? அதிவேக ஓட்டுநர் அடாவடி..! கோபித்துக் கொண்டு இறங்கி சென்றார்
Aug 07, 2024 9:24 PM
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், பயணிகளை மரண பீதியடைய செய்தும், அதிவேகமாக மாநகர பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனர், தட்டிகேட்டவர்களிடம் தகராறு செய்து பேருந்தைவிட்டு இறங்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிவேகமாக பேருந்தை இயக்குவது ஏன் ? என்று பயணிகள் கேள்வி எழுப்பியதால் கோபத்தில், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு சாலையில் இறங்கிச்சென்ற அதிவேக ஓட்டுநர் இவர் தான்..!
தி. நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் E18 என்ற எண் கொண்ட அரசு மாநகரபேருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து , தாறுமாறாகவும் வேகமாகவும் இயக்கப்பட்டதால் பலர் பேருந்துக்குள் நிற்க இயலாமல் கீழே விழுந்ததாக கூறப்படுகின்றது.
பாஸ்ட் அன் பியூரியஸ் நாயகன் வின் டீசல் என்ற நினைப்பில் அரசு பேருந்தை தாறுமாறாக ஓட்டி வந்த ஓட்டுநரை , பயணி ஒருவர் செல்போனில் படம்பிடித்ததால், தனது வேலைக்கு வேட்டு வைத்து விடுவார் என பயந்து பேருந்தை பல்லாவரம் அருகே நடுவழியில் நிறுத்தினார் அந்த அதிவேக ஓட்டுனர். அத்தோடு தனது பையை எடுத்துக் கொண்டு இறங்கிச்சென்றதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
பேருந்துக்குள் தவித்த பெண் பயணிகளுடன் , தான் வரும் வழியில் எத்தனை வண்டிகளை இடித்து விட்டு வந்தேன் தெரியுமா ? என்று பதிலுக்கு பதில் பட்டியலிட்டார் அந்த லோ பட்ஜெட் வின் டீசல்..!
தன்னுடைய அட்ராசிட்டியை செய்தியாளர்கள் படம்பிடிப்பதை பார்த்ததும் பயந்து போன ஓட்டுநர், சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறினார். அப்போது “இந்த வேலை போனா தனக்கு இன்னும் எத்தனையோ வேலை உள்ளது” என்று எகத்தாளமாக பேசியபடி பேருந்தை எடுத்துச்சென்றார்.