வங்கதேசத்தில் நீடித்துவரும் வன்முறைச் சம்பவங்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து இந்துக்களின் கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகளைக் குறிவைத்து வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடைகளுக்குத் தீவைக்கப்பட்டபோது, தீயணைப்புத் துறையினரோ, காவல்துறையினரோ உதவிக்கு வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அச்சம் காரணமாக ஏராளமான இந்துக்கள் எல்லைப் பகுதியை நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.